கிழக்கு மாகாணத்தில் எலுமிச்சைகளின் விலை சடுதியாக அதிகரிப்பு

Report Print V.T.Sahadevarajah in சமூகம்

கிழக்கு மாகாணத்திலுள்ள சில சந்தைகளில் எலுமிச்சைகளின் விலை சடுதியாக அதிகரித்தமை குறித்து நுகர்வோர் விசனம் தெரிவித்துள்ளனர்.

மருதமுனை, நற்பிட்டிமுனை, பாண்டிருப்பு, கல்முனை, கல்முனைக்குடி, சாய்ந்தமருது, மாளிகைக்காடு, காரைதீவு ஆகிய பகுதிகளில் உள்ள சந்தைகளிலேயே இன்றைய தினம் மிகச் சிறிய எலுமிச்சை ஒன்று ரூபா 50 இற்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

உற்பத்தி வீழ்ச்சியும், வெளி இடங்களில் இருந்து எலுமிச்சைகள் கொண்டு வரப்படுவதனாலும் தான் விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் குறிப்பிடுகின்றனர்.

தற்போது சந்தைகளில் ஒரு கிலோகிராம் எலுமிச்சைகளின் விலை ரூபா 800 முதல் விற்பனையாகிறது.

எனினும் இரு வாரங்களுக்கு முன்னர் 100 ரூபாவிற்கும் குறைவான விலையில் எலுமிச்சை விற்பனை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers