தம்புள்ளையில் கப்பம் பெற்ற இருவர் கைது

Report Print Mubarak in சமூகம்

தம்புள்ளை பேருந்து நிலையத்திற்கு அருகில் கப்பம் பெற்ற இருவரை இன்று காலை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாக தம்புள்ளை பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தம்புள்ளை பொலிஸ் நிலைய தலைமையகத்திற்கு கிடைக்கப் பெற்ற தகவலையடுத்து, குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினரே மேற்படி சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர்.

தம்புள்ளை நகரில் தனியார் பேருந்துகள் நிறுத்தப்படும் இடங்களில் சிவில் உடையில் கண்காணிப்பு மேற்கொண்டிருந்த போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரையும் தீவிர விசாரணைகளின் பின் நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Latest Offers