பாலத்தை புனரமைத்து தருமாறு மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்

Report Print Gokulan Gokulan in சமூகம்

கிண்ணியா - குறிஞ்சாக்கேணி பாலத்தை புனரமைத்து தருமாறு கோரி கிண்ணியா பிரதேச மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கிண்ணியா பிரதேசசபைக்குட்பட்ட குறிஞ்சாக்கேணி பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளது.

இதனால் மக்களின் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டுள்ளது, எனவே இதனை மிக விரைவில் புனரமைத்து தருமாறு கோரி இளைஞர் ஒன்றியத்தினர் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

குறிஞ்சாக்கேணி பிரதான வீதியில் அமைந்துள்ள கிண்ணியா பிரதேச சபையையும், கிண்ணியா நகர சபையையும் பிரிக்கின்ற பாலம் குறிஞ்சாக்கேணி பாலமாகும்.

இப்பாலத்தினூடாக நாளொன்றுக்கு பல வாகனங்களும், பாடசாலை மாணவர்களும், ஆயிரக்கணக்கான பொது மக்களும் போக்குவரத்து செய்து வருகின்றனர்.

எனவே மக்களின் போக்குவரத்து அசௌகரியங்களுக்கு உட்படாமல் சீராக நடக்க வேண்டுமாக இருந்தால் மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகள் இவ்விடயம் தொடர்பாக உடனடி கவனம் செலுத்தி குறித்த பாலத்தினை புனர்நிர்மாணம் செய்ய வேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்திருந்தனர்.

கிண்ணியாவில் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தும் கூட இப்பாலத்தின் நிர்மாண வேலைகளை செய்ய முடியாமை இருப்பது வெட்கப்பட வேண்டிய விடயம் எனவும் பொதுமக்கள் இதன் போது குறிப்பிட்டிருந்தனர்.

மேலதிக செய்திகள் - அஸ்வர் அலீம்

Latest Offers