விமான நிலையத்தில் தமிழகத்தை சேர்ந்தவர் கைது

Report Print Steephen Steephen in சமூகம்

இரண்டு கோடியே 74 லட்சத்து 65 ஆயிரத்து 332 ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு நாணயத்தாள்களை சிங்கப்பூருக்கு கடத்திச் செல்ல முயற்சித்த இந்தியர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டதாக சுங்க திணைக்களத்தின் பேச்சாளர் சுனில் ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

சந்தேக நபர் இன்று அதிகாலை 1 மணியளவில் ஸ்ரீலங்கன் விமானம் மூலம் சிங்கப்பூர் புறப்பட்டுச் செல்ல விமானநிலையத்திற்கு சென்றிருந்த போதே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

28 வயதான தமிழகத்தை சேர்ந்த வர்த்தகரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சந்தேக நபர் தனது பயணப் பொதியில் மறைத்து வைத்து 19 ஆயிரத்து 250 பிரிட்டிஷ் பவுண், 95 ஆயிரம் யூரோ, 71 ஆயிரத்து 50 சவுதி ரியால், 21 ஆயிரம் திர்ஹாம்களை சிங்கப்பூருக்கு எடுத்துச் செல்ல முயற்சித்துள்ளதாகவும் சுங்க பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Latest Offers