ஹொரணயில் பயங்கரமான விபத்து: வண்டியில் சிக்கிய சாரதியை மீட்ட பிரதேசவாசிகள்

Report Print Manju in சமூகம்

பண்டாரகம - ஹொரண பிரதான பாதையில் குலுபன் சந்தியில் அம்புலன்ஸ் வண்டியும், பேருந்தும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

ஹொரண தீயணைக்கும் படைக்கு சொந்தமான அம்புலன்ஸ் வண்டியே விபத்துக்குள்ளாகியுள்ளது.

அம்புலன்ஸில் சிக்கிக் கொண்ட சாரதியை பிரதேச வாசிகள் வெளியில் எடுக்க போராடியுள்ளார்.

அதன்பின்னர் உடனடியாக ஹொரண தீயணைப்பு படைப்பிரிவின் மற்றொரு வாகனத்தில் படுகாயடைந்த சாரதி வைத்தியசலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

தலையில் படுகாயமடைந்த சாரதி ஹொரண வைத்தியசாலையில் இருந்து மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக ஹொரண பொலிஸார் குறிப்பிட்டனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹொரன பொலிஸ் மேற்கொண்டு வருகின்றது.

Latest Offers