அங்கவீனமுற்ற படைவீரரை தாக்கிய ஐ.தே.க எம்.பி. உட்பட்ட குழுவினர்

Report Print Manju in சமூகம்

ஐ.தே.க உறுப்பினர்கள் குழுவினால் அங்கவீனமுற்ற முன்னாள் படைவீரர் மேஜர் நீதி அஜித் பிரசன்ன தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அண்மையில் அலரிமாளிகைக்கு அருகில் பயணம் செய்தபோது வீதிக்கு வந்த ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர்களான பாலித தேவரரப்பெரும மற்றும் ஹெசோ விதானகே உட்பட குழுவினர் தன்னை தாக்கியதாக மேஜர் அஜித் பிரசன்ன குறிப்பிட்டுள்ளார்.

மேஜர் அஜித் பிரசன்ன கடந்த யுத்தத்தில் காயமடைந்து அங்கவீனமுற்ற படைவீரர் என தெரிவிக்கப்படுகிறது.

ஐ.தே.க உறுப்பினர்கள் அவர்களின் அதிகாரத்தைப் பயன்படுத்தி வீதியில் சென்ற பாதசாரிகள் மீது தாக்குதல் நடத்தியமை தொடர்பாக சமூக வலைத்தளங்களில் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.

Latest Offers