சிறுவனின் மரணத்திற்கு காரணமாக தந்தை விளக்கமறியலில்

Report Print Mubarak in சமூகம்

திருகோணமலை, முள்ளிப்பொத்தானை பகுதியில் நான்கு வயதுடைய சிறுவன் ஒருவரின் உயிரிழப்பு காரணமான சிறுவரின் தந்தையை விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதிமன்ற பதில் நீதிவான் சானிக்கா பெரேரா உத்தரவிட்டுள்ளார்.

சந்தேகநபரை இம்மாதம் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு இன்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முள்ளிப்பொத்தானை, எட்டாம் கொலனியைச் சேர்ந்த 43 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

முள்ளிப்பொத்தானை நான்காம் வாய்கால் பகுதியில் தந்தையின் வயல் விதைப்பு நடவடிக்கையின் போது சிறிய ரக உழவு இயந்திரமொன்றில் சிக்குண்டு சிறுவன் உயிரிழந்துள்ளார்.

சிறுவனின் மரணத்திற்கு காரணமான சந்தேக நபரான தந்தையை தம்பலாகாமம் பொலிஸார் கைது செய்து கந்தளாய் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே பதில் நீதிவான் இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்பலாகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Latest Offers