சீரற்ற காலநிலைக்கு மத்தியில் 1800 கிலோகிராம் மீன்கள் மீட்பு

Report Print Mohan Mohan in சமூகம்

முல்லைத்தீவில் கரைவலை மீன்பிடித்தொழிலாளர்கள் 1800 கிலோகிராம் மீன்களை கடலில் இருந்து மீட்டுள்ளனர்.

தொடரும் சீரற்ற காலநிலையின் மத்தியில் முல்லைத்தீவு, மணற்குடியிருப்பு பகுதி மீனவர்கள் இன்று கரைவலை மீன்பிடித்தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டபோதே இவ்வாறு பெருந்தொகையான மீன்கள் சிக்கியுள்ளன.

முல்லைத்தீவில் ஒருவரத்திற்கு மேலாக தொடரும் பருவமழை இடப்பெயர்ச்சி காரணமாக கடலின் கொத்தளிப்பு அதிகமாகவே காணப்படுகின்றது.

இதனால் மீனவர்களின் கடற்தொழில் அண்மை நாட்களாக பாதிப்படைந்திருந்ததுடன், மீனவக் குடும்பங்கள் பொருளாதார நெருக்கடியை சந்தித்திருந்தனர். அத்துடன் உள்ளூர் மக்களின் உணவுத்தேவையை பூர்த்தி செய்ய போதியளவு மீன்கள் கிடைக்கவில்லை.

இந்நிலையில், கடலில் இருந்து மூன்று கடல்மைல் தூரம் வரை சென்ற மீனவர்கள் கரைவலை வீச்சில் ஈடுபட்டதை தொடர்ந்து சுமார் 6 மணித்தியாள கடற்போராட்டத்தின் மத்தியில் மீனவர்கள் ஒரே தடவையில் 1800 கிலோகிராம் மீன்களை பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers