மழை காரணமாக மன்னாரில் பல இடங்கள் நீரில் முழ்கியுள்ளன! பொது மக்கள் பெரும் அவதி

Report Print Ashik in சமூகம்

கடந்த சில நாட்களாக வடக்கு கிழக்கு பகுதிகளில் சீரற்ற கால நிலையால் பல்வேறு பிரதேசங்களில் கடும் மழை பெய்து வருகின்றமை காரணமாக தாழ் நில பிரதேசங்கள் பல நீரில் மூழ்கியுள்ளது.

குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை காரணமாக பல்வேறு பிரதேசங்கள் நீரில் மூழ்கியுள்ளன.

மன்னாரின் தாழ் நில பிரதேசங்களான சாந்திபுரம் , ஜிம்றோன் நகர், எமில் நகர், உப்புக்குளம் , எழுத்தூர், இருதயபுரம் போன்ற பிரதேசங்களே இவ்வாறு நீரில் முழ்கியுள்ளன.

வீடுகள், வீதிகள், மைதானங்கள் பேன்றவை அதிகளவில் நீரினால் மூழ்கியுள்ளமையால், குறிப்பிட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

அது மட்டுமல்லாது பாடசாலை மாணவர்கள் காலணிகள் கூட அணிந்து செல்ல முடியாத நிலை காணப்படுகின்றது.

ஒழுங்கான கழிவு நீர் முகாமைதுவம் இன்மையால் மழை நீரானது வடிந்து செல்ல முடியாத நிலையில் மக்கள் குடியிருப்பு பகுதிகளில் தேங்கி காணப்படுகின்றது.

வடி நீர் கால்வாய்களானது சில இடங்களில் குப்பை கூளங்களினால் அடைக்கப்பட்டிருப்பதனால் கழிவு நீரானது கடலுடன் கலக்க முடியாத நிலை காணப்படுகின்றது .

எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மழை நேரங்களில் கழிவுகளை சரியான முறையில் அகற்றுவதற்கான ஏற்பாடுகளும் இதுவரையிலும் செய்து கொடுக்கப்படவில்லை எனவும் மக்கள் விசனம் தொரிவித்துள்ளனர்.


Latest Offers