தீபாவளி தினத்தில் வெளியே சென்ற குடும்பஸ்தருக்கு நேர்ந்த பரிதாபம்

Report Print Thirumal Thirumal in சமூகம்

திம்புள்ள - பத்தனை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட குயின்ஸ்பெரி கீழ்பிரிவில் உள்ள கிளை ஆற்றிலிருந்து இன்று காலை ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குயின்ஸ்பெரி தோட்டத்தில் வசித்து வந்த 38 வயதுடைய 2 பிள்ளைகளின் தந்தையான நடேசன் அரிகிருஷ்ணசாமி என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

தீபாவளி தினமான நேற்று வெளியே சென்ற குறித்த நபர் இரவாகியும் வீடு திரும்பாத நிலையில், ஆற்றில் ஒருவரின் சடலம் மிதப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து திம்புள்ள - பத்தனை பொலிஸாரும், நீதவானும் குறித்த இடத்திற்கு வருகை தந்திருந்த நிலையில் சடலம் கரைக்கு கொண்டு வரப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சடலம் தற்பொழுது நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், மரணம் தொடர்பாக திம்புள்ள - பத்தனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Latest Offers