மைத்திரிக்கு நன்றி கூறிய தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி!

Report Print Kumar in சமூகம்

கிழக்கு மாகாணத்திற்கு என தனி அமைச்சினை உருவாக்கியதன் மூலம் கிழக்கு அபிவிருத்திக்கு வித்திடப்பட்டுள்ளதாக தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் ஊடக பேச்சாளர் எஸ்.வசந்தராஜா தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.

அதற்காக ஜனாதிபதிக்கு விசேட நன்றியை கிழக்கு மாகாண மக்கள் சார்பாக தெரிவித்துக்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த மூன்றரை வருட ஆட்சியில் கிழக்கு மாகாணத்தில் குறிப்பிடத்தக்க எந்த அபிவிருத்தியும் மேற்கொள்ளப்பட வில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைக்கிராமங்கள் தொடர்ந்து எந்தவித அபிவிருத்தியையும் காணாத நிலையே இருந்துவருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் உட்கட்சி போராட்டம் அதிகரித்துள்ளதாகவும், நாடாளுமன்றத்தில் நடைபெறும் வாக்கெடுப்பின் போதே அக்கட்சியில் உள்ளவர்களின் நிலைப்பாடு தெரியவரும் என்றும் எஸ்.வசந்தராஜா குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers