மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் ஒருவர் பலி

Report Print Navoj in சமூகம்

மட்டக்களப்பு - காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் மின்சாரம் தாக்கியதன் காரணமாக குடும்பஸ்தர் ஒருவர் மரணித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

புதிய காத்தான்குடி - அன்வர் பள்ளி வீதியைச் சேர்ந்த ஏ.எல்.எம். அனீஸ் (வயது39) என்பரே இன்று அதிகாலையில் மரணமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

தற்போது பெய்து வரும் அடை மழை காரணமாக குறித்த நபர் தனது வீட்டு வளவில் மின் விளக்கைப் பொருத்தும் வேலையில் ஈடுபட்டிருந்தார்.

அதற்காக போக்கஸ் மின் விளக்கு ஒன்றை பொருத்திக் கொண்டிருந்த போது விளக்கின் மின்சாரத் தொடர்பு வயர் வீட்டு முற்றத்தில் தேங்கிக் கிடந்த மழைநீரில் தொடர்புபட்டு குறித்த நபர் மீது மின்சாரம் தாக்கியுள்ளது.

இதன் போது பாதிக்கப்பட்ட குறித்த நபரை காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதும் அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டிருந்ததாக வைத்தியாசாலை வட்டாரங்கள் தெரிவித்திருந்தன.

Latest Offers