கேரள கஞ்சாவுடன் வசமாக சிக்கிய இளைஞன்

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

திருகோணமலை - சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தங்கநகர் பகுதியில் கேரள கஞ்சாவுடன் இளைஞன் ஒருவரை கைது செய்துள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த கைது சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட இளைஞன் கிண்ணியா, ஆலயங்கேணி பகுதியைச் சேர்ந்த 17 வயதுடையவர் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கேரள கஞ்சா வாங்கி கொண்டு இளைஞர் ஒருவர் செல்வதாக சேருநுவர பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து குறித்த நபரிடம் சோதனையிட்ட போது 2900 மில்லிகிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை இன்றைய தினம் மூதூர் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் சேருநுவர பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.