முல்லைத்தீவில் 35 வருடங்களின் பின் புனரமைக்கப்பட்ட குளத்திற்கு ஏற்பட்ட நிலை

Report Print Theesan in சமூகம்

முல்லைத்தீவு - கரைத்துறைப்பற்று பிரதேச செலயகப்பிரிவிலுள்ள குமுழமுனை கிழக்கில் அமைந்துள்ள நித்தகைக்குளமே இன்று காலை உடைப்பெடுக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

2018ஆம் ஆண்டு மாகாண நீர்ப்பாசன அமைச்சின் நிதி உதவியில் கடந்த 35 வருடங்களுக்கு பின்னர் இந்த வருடம் புனரமைப்புச் செய்யப்பட்ட குறித்த குளமே கடந்த சில தினங்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக உடைப்புக்குள்ளாகி இருந்தது.

குறித்த குளத்தில் 13அடி தண்ணீர் கொள்ளளவு செய்யக்கூடியதாக இருந்துள்ளது. எனினும் தொடர்ச்சியாக பெய்து வரும் கடும்மழை காரணமாக இக்குளத்தில் உடைப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் குறித்த குளத்தை அண்டிய விவசாய வயல்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன் விவசாயிகளின் உடமைகளும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் எவருக்கும் உயிராபத்து ஏற்படவில்லை என்றும் குளத்தை அண்டிய கிராமங்களிலுள்ளவர்களை பாதுகாப்பான இடங்களில் குடியமருமாறும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதேவேளை நாயாற்று கடற்பரப்பின் நீர்மட்டம் கடந்த சில தினங்களாக பெய்துவரும் கடும் மழை காரணமாக அதிகரித்துள்ளது.

எனவே குறித்த பகுதியை அண்மித்து வசிப்பவர்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்ததாகவும் எமது பிராந்திய செய்தியாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Latest Offers