அலோசியஸ், பலிசேன ஆகியோரின் விளக்க மறியல் காலம் நீடிப்பு

Report Print Kamel Kamel in சமூகம்

மத்திய வங்கி பிணை முறி மோசடியுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள அர்ஜூன் அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன ஆகியோரின் விளக்க மறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

பேர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜூன் அலோசியஸ் மற்றும் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன ஆகியோரின் விளக்க மறியல் காலம் எதிர்வரும் 21ம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு கோட்டே நீதிமன்றம் இந்த உத்தரவினை இன்றைய தினம் பிறப்பித்துள்ளது. இதேவேளை, அர்ஜூன் அலோசியஸின் தந்தைக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள பயணத் தடை தற்காலிக அடிப்படையில் நீக்கப்பட்டுள்ளது.

Latest Offers