அழகுக்கலை நிலையத்திற்குள் ஆயுதங்களுடன் சென்ற நபர்கள்! கணவனும் மனைவியும் படுகாயம்

Report Print Manju in சமூகம்

பாதுக்க பகுதியிலுள்ள அழகு நிலையத்திற்கு ஆயுதங்களுடன் நுழைந்த இருவர் அழகுக்கலை நிபுணரான பெண்ணொருவரையும் அவரது கணவனையும் கத்தியால் வெட்டியுள்ளதாக பாதுக்க பொலிஸார் குறிப்பிட்டனர்.

தகாத உறவு காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றதாக கூறப்படுவதுடன் ஒப்பந்தத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பாதுக்க பொலிஸாரின் விசாரணைகளின் மூலம் வெளிவந்துள்ளது.

அழகுக்கலை நிபுணரின் மீது காதலில் வீழ்ந்த பாதுக்க பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலதிபர் அவருக்காக நிறைய பணம் செலவழித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பெண்ணுடன் தொடர்ந்தும் அவர் தொடர்பைப்பேணி வந்துள்ளதுடன், அவர் தனது மனைவியைப் பிரிந்து வாழ்ந்துள்ளார்.

இருப்பினும், பல சந்தர்ப்பங்களில் அழகுக்கலை நிபுணர் தன்னை விட்டு விலகுவதை அவர் புரிந்து கொண்டதுடன், இப்பிரச்சினை பாதுக்க பொலிஸ் நிலையம் வரை கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

பாதுக்க பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எச்.கே. பி குணரத்ன,கடந்த 4 நாட்களுக்கு முன்னர் இரு தரப்பினருக்கும் எச்சரிக்கை செய்து, சமரசம் செய்து வைத்துள்ளார்.

இதனையடுத்து பாதுக்க பொது மருத்துவமனைக்கு அருகில் இருந்த அழக்குக்கலை நிலையத்தை அகற்றி ஹொரண பகுதியில் அமைத்துள்ளார் குறித்த பெண்.

இந்த நிலையில், பாதுக்க உணவகத்திற்கு முச்சக்கரவண்டியில் வந்த மூவர் அதனை அங்கே நிறுத்திவிட்டு, பாதுக்க முச்சக்கர வண்டி நிறுத்துமிடத்தில் வேறொரு முச்சக்கர வண்டியைப்பெற்றுள்ளனர்.

அதில் வாரச்சந்தைக்குச் சென்று அங்கு மீன்வெட்டுபவர்களிடமிருந்த கத்தியை எடுத்துக்கொண்டு அழக்குக்கலை நிலையத்திற்குசென்று குறித்த பெண்ணையும் அவரது கணவனையும் வெட்டி தப்பிச்சென்றுள்ளனர்.

பாதுக்க பொலிஸ் நிலையபொறுப்பதிகாரியுடனான குழுவினர் இணைந்து விசாரணைகளை நடாத்தியபோது இந்த ஒப்பந்தத்தை வழங்கியதாக கூறப்படும் அழகுக்கலை நிபுணரின் காதலன் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் மேலும் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன் காயமடைந்தவர்கள் ஹோமகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.

Latest Offers