சீசெல்ஸில் தடுக்கப்பட்ட இரண்டு இலங்கை கப்பல்கள்

Report Print Ajith Ajith in சமூகம்

சீசெல்ஸ் கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டதாக கூறப்பட்டு இரண்டு இலங்கை கப்பல்கள் அந்த நாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில் இதில் ஒரு கப்பலின் தலைவர் சீசெல்ஸ் நீதிமன்றம் ஒன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இரண்டாவது கப்பலின் தலைவர் மீது விசாரணைகள் இடம்பெறுவதாக சீசெல்ஸ் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த கப்பல்கள் இரண்டும் எப்போது தடுக்கப்பட்டன என்ற விடயம் வெளியாகவில்லை.

எனினும் முதல் கப்பலின் தலைவர் கடந்த செவ்வாய்க்கிழமையன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

அவரை நவம்பர் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Latest Offers