வெள்ளத்தில் மூழ்கிய கிளிநொச்சி

Report Print Suman Suman in சமூகம்

கிளிநொச்சியில் நேற்று பெய்த கடும் மழை காரணமாக சில பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்த கடும் மழை காரணமாக கிளிநொச்சி நகரின் இரத்தினபுரம், ஆனந்தபுரம் கிழக்கு கிராமங்களின் ஒரு பகுதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

கிளிநொச்சி கனகாம்பிகை குளம் வான்பாய்ந்து வருகின்றமையால், ஆனந்தபுரம் கிழக்கு மற்றும் இரத்தினபுரம் கிராமங்களின் சில பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால் அந்தப் பகுதிகளில் வாழ்கின்ற பொது மக்கள் கடும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

அந்த வகையில் கிளிநொச்சி ஆனந்தபுரம் கிழக்கில் 25 குடும்ங்களைச் சேர்ந்த 77 பேரும் இரத்தினபுரம் கிராமத்தில் நூற்றுக்கு மேற்பட்ட குடும்பங்களுகம் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன.

மக்களின் வீடுகளுக்கு வெள்ளம் சென்றமையினால் நேற்றிரவு(07) முதல் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். சீரான வடிகாலமைப்பு வசதிகள் இன்மையால் வெள்ள நீர் வழிந்தோட முடியாத நிலையில் இவ்வாறு பாதிப்புக்கள் ஏற்படுகின்றன என பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 11 குடும்பங்களை செர்ந்த 57 பேருக்கான உடனடி உணவுகள் கிளிநொச்சியில் உள்ள படையினர் வழங்கியுள்ளனர்.

அத்தோடு 200 குடும்பங்களுக்கான உணவு மற்றும் குடிநீர், பிஸ்கட் போன்றவற்றை கரைச்சி பிரதேச சபையின் கிளிநொச்சி நகர சுயேச்சைக் குழு உறுப்பினர் தா.ரஜினிகாந்த வழங்கியுள்ளார்.

அத்துடன் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினர் நிலைமைகளை நேரில் சென்று பார்வையிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers