முரளி நீங்கள் எங்கள் அனைவருக்கும் முன்மாதிரி! கோத்தபாய ராஜபக்ச பாராட்டு

Report Print Murali Murali in சமூகம்

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரனுக்கு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

இது குறித்து கோத்தபாய ராஜபக்ச தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை விடுத்துள்ளார். அந்த பதிவில் தெரிக்கப்பட்டுள்ளதாவது,

“அனைத்து அரசியல் தலைவர்களும் இந்த நாட்டை கட்டியெழுப்புவதற்கும் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கும் பாடுபடவேண்டும் என்ற எனது நிலைப்பாட்டை பிரதிபலிக்கும் விதத்தில் முரளிதரனின் கருத்து அமைந்துள்ளது.

முரளிதரன் நீங்கள் எங்கள் அனைவருக்கும் உத்வேகம் அளிக்கின்றீர்கள்” என கோத்தபாய ராஜபக்ச தனது டுவிட்டர் பதிவில் மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழ் அரசியல்வாதிகள் தமிழ் மக்களிற்கு அரசியல் தீர்வு அவசியம் என தெரிவித்து வருகின்றர் எனினும் அவ்வாறான தீர்வொன்று தேவையா என முரளீதரன் கேள்வி எழுப்பியிருந்தார்.

ஜனநாயகம், உரிமைகள் சட்டம் என்பன இரண்டாவது, நாட்டு மக்களுக்கு மூன்று வேளை தேவையான உணவு, பிள்ளைகளுக்கான கல்வி என்பனவே முதன்மையானது என அவர் கூறியிருந்தார்.

முரளிதரனின் இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பலரும் அவருக்கு எதிராக கருத்து வெளியிட்ட வரும் நிலையில், கோத்தபாய ராஜபக்ச முரளிதரனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

Latest Offers