விளையாட்டுக்களே இவற்றை கற்றுத்தருகின்றன! சுப்ரமணியம் சுரேன்

Report Print Arivakam in சமூகம்

விளையாட்டுக்கள் நமக்கு தன்னம்பிக்கையையும் இறுதிவரை வெற்றிக்காக போராட வேண்டும் என்கின்ற அடிப்படையையும் கற்றுத்தருகின்றது என பச்சிலைப்பள்ளி பிரதேச சபை தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன் தெரிவித்துள்ளார்.

நேற்று பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் பதிவுசெய்யப்பட்ட விளையாட்டுக் கழகங்களாகிய தர்மக்கேணி பூதவராயர் விளையாட்டுக்கழகம் மற்றும் முகமாலை இளம்தென்றல் விளையாட்டுக் கழகம் போன்றவற்றை சந்தித்து அவர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கிவைத்து அவர்களுடன் கலந்துரையாடியவேளை மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், நாம் ஒவொரு துறைகளிலும் முன்னேறவேண்டும் குறிப்பாக பொருளாதாரம், கல்வித்துறை, விளையாட்டுத்துறை கலைத்துறை, போன்றவற்றிலும் அதிக கவனமெடுக்க வேண்டும் ஏனெனில் எதிர்காலத்தில் எமது நாட்டை நாம் நிர்வகிக்க இத்துறைகள் இன்றியமையாதது ஆகவே ஒவொரு வீரர்களும் மிகவும் அர்ப்பணிப்புடன் விளையாட்டுத்துறையை வளரத்தெடுத்து அடுத்த சந்ததிக்கு கையளிக்கவேண்டிய பொறுப்பு உங்களிடமே உள்ளது என்றார்.

இங்கு பிரதேச சபையின் உப தவிசளர் கஜன் மற்றும் உறுப்பினர்களான ரமேஸ், கோகுல்ராஜ் போன்றோர் உடனிருந்தனர்.

Latest Offers