யாழில் 12 வயது சிறுமிக்கு 19 வயது இளைஞனால் நடந்த கொடூரம்!

Report Print Shalini in சமூகம்

யாழ்ப்பாணம் - பருத்தித்துறையில் 12 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் ரீதியாகவும், கூரிய ஆயுதங்களாலும் கொடுமைப்படுத்திய சந்தேகத்தின் பேரில் 19 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

நேற்றைய தினம் பாடசாலைக்கு சென்ற சிறுமி மாலை வரை வீடு திரும்பாத நிலையில் பெற்றோர் சிறுமியை தேடியுள்ளனர்.

இந்த நிலையில் ஊரவர்கள் வழங்கிய சில தகவல்களின் அடிப்படையில், இளைஞர் ஒருவரின் வீட்டுக்கு சென்று தேடியுள்ளனர்.

அப்போது அறை ஒன்றில் கையில் காயங்களுடன் தமது மகளை பெற்றோர் மீட்டு மந்திகை வைத்தியசாலையில் சேர்ந்ததுடன் பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் சிறுமி கடத்தி வைக்கப்பட்டு இருந்த வீட்டில் இருந்த இளைஞனை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இளைஞனிடம் விசாரணைகளை மேற்கொண்ட போது “கடந்த 3 மாத காலமாக தான் சிறுமியை காதலித்து வந்ததாகவும், அதனாலேயே அவரை தனது வீட்டுக்கு அழைத்து சென்றதாகவும்“ தெரிவித்துள்ளார்.

இதேவேளை மந்திகை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி நேற்று யாழ்.போதனா வைத்தியசாலை பெண் நோயியல் பிரிவுக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக குறிப்பிடப்படுகின்றது.

Latest Offers