முல்லைதீவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் - செல்வம் அடைக்கலநாதன்

Report Print Theesan in சமூகம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் பணிப்புரை விடுத்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பாக முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதி பணிப்பாளர் லிங்கேஸ்வர குமாருடன் நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவரும், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த மக்களினுடைய நிவாரணம் , வாழ்வாதாரம் சம்பந்தமாக கலந்துரையாடி உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஆறு பிரதேச செயலகங்களுக்குட்பட்ட 202 குடும்பங்களில், 647 உறுப்பினர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாவும் 7 குளங்கள் முற்றும் முழுதாக பாதிப்படைந்துள்ளதாகவும் இவ் அனர்த்தத்தின் போது சீரற்ற காலநிலைக்குள் பாதிக்கப்பட்ட ஆறு நபர்களை விமானப்படையின் உதவியுடன் மீட்டெடுத்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

உடனடியாக அவர்களுடைய நிவாரணங்கள், தற்காலிக கொட்டகைகளை அமைத்து வழங்குமாறு பிரதிப்பணிப்பாளருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Offers