மலையக மக்களுக்கு அரசியல் சூழ்நிலை தொடர்பாக தெளிவுப்படுத்தும் கூட்டம்

Report Print Thirumal Thirumal in சமூகம்

இன்றைய அரசியல் சூழ்நிலை தொடர்பாக மலையக மக்களுக்கு தெளிவுபடுத்தும் கூட்டம் ஒன்று இன்று நடைபெற்றுள்ளது.

ஹட்டன், டீ.கே.டபிள்யூ மண்டபத்தில் இன்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஏற்பாட்டில் இக்கூட்டம் நடைபெற்றுள்ளது.

இந்த கூட்டத்தில் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவருமான மனோ கணேசன், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களும், கூட்டணியின் பிரதி தலைவர்களான பழனி திகாம்பரம், வேலுசாமி இராதாகிருஷ்ணன், கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மயில்வாகனம் திலகராஜ், அரவிந்தகுமார் மற்றும் கூட்டணியின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், நகர சபை உறுப்பினர்கள், மலையக மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள், தொழிலாளர் தேசிய சங்கத்தின் உறுப்பினர்கள், மலையகத்தில் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக ஒன்றிணைந்து கொண்டவர்கள் ஆகியோர் பங்குபற்றியுள்ளனர்.

Latest Offers