கொடூரமாக சித்திரவதை செய்து பிச்சைக்கார பெண்ணை கொலை செய்த தம்பதியினர்

Report Print Manju in சமூகம்

பெண்ணொருவரை கொலை செய்து அப்பெண்ணின் 13 வயதான மகளை தாக்கி பாலியல் பலாத்காரம் செய்த தம்பதியினர் உட்படமேலும் இருவருக்கு கடந்த 30ம் திகதி அன்று ஹோமகம உயர்நீதிமன்ற நீதிபதி அமல் திலகரட்னவினால் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

1998 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இந்த குற்றச்செயல் நடந்துள்ளதுடன் கடந்த 20 ஆண்டுகளாக வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வந்துள்ளது.

கொரளகே கீன் மெனிக்கே என்ற பெண்ணும் அவருடைய 13 வயதான மகளும் மாலபே வாரச்சந்தையில் அமைந்துள்ள பஸ் நிறுத்துமிடத்தில் வாழ்ந்து வந்தனர்.

பிச்சை எடுத்து தனது மகளுடன் மிகவும் கடினமாக வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார் குறித்த பெண்.

சிறிது காலத்திற்கு பின்னர் மாலபே பொது வியாபார நிலையத்தில் வியாபார நிலையத்தை ஆரம்பித்து நடாத்திச் சென்ற தம்பதியினர் குறித்த தாய் மகளுடன் பாசமாக இருந்துள்ளனர்.

இந்த நிலையில் குறித்த பெண்ணின் மகளை அவர்களின் தலஹேன பகுதியில் அமைந்துள்ள வீட்டில் வேலை செய்வதற்காக கொண்டு சென்றுள்ளனர்.

அந்த நேரத்தில், இந்த பிச்சைக்கார தாயார் தன் மகளை பார்க்க குறித்த வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார்.

சிறிது காலம்சென்ற பின்னர் தொழிலதிபரான குறித்த வீட்டின் உரிமையாளர் குறித்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய ஆரம்பித்துள்ளார்.

அதன் பிறகு, இந்த வணிகத் தம்பதிகள் தவறான குற்றச்சாட்டை குறித்த தாய் மற்றும் மகள் மீது சுமத்தியதுடன் அவர்களை தாக்கியுள்ளனர்.

தங்களது இல்லத்தில் 30500 ரூபாய் திருடப்பட்டதாகவும் வீட்டு கிணற்று தண்ணீரில் நஞ்சு கலந்தமை போன்ற குற்றச்சாட்டுக்கள் தாய் மற்றும் மகளுக்கு எதிராக சுமத்தியுள்ளனர்.

அவர்கள் பிச்சைக்கார அம்மாவையும் மகளையும் கொடூரமாக தாக்கினர்.

தம்பதியினர் இருவரும் சேர்ந்து, அம்மாவையும் மகளையும் வீட்டின் பின்புறத்தில் கடுமையாக அடித்து, சித்திரவதை செய்ததுடன், இந்த தாக்குதலில் மேலும் இருவரும் இணைந்து கொண்டுள்ளனர்.

இருவரின் காயங்களுக்கு உப்பு நீரை ஊற்றி அவர்களின் இரகசிய அறையில் வைத்து சித்திரவதை செய்துள்ளனர்.

அத்தகைய மிருகத்தனமான தாக்குதல்களின் போது, பிச்சைக்கார பெண் தரையில் விழுந்தள்ளார். தரையில் விழுந்த பெண்ணை, வீட்டு உரிமையாளராக பெண் வீட்டுக்கு வெளியே இழுத்துச் சென்றுள்ளார்.

அந்தநேரத்தில் பிச்சைக்கார பெண் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன் பின்னர் அவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து உயிரிழந்த பெண்ணின் உடலை 15 கிலோ கிராம் கல்லில் வைத்து கட்டி உரப்பையில் போட்டு முல்லேரியா நீர்த்தேக்கத்தில் போட்டுச் சென்றுள்ளனர்.

மிருக்கதனமான தாக்குதலுக்கு இலக்கான பிச்சைக்கார பெண்ணின் மகளின் முகம் உட்பட உடம்பு முழுவதும் 16 இடங்களில் சூட்டுக்காயங்கள் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இத்தகைய கொடூரமான செயலை செய்த பிரதிவாதிகளுக்கு இலகுவான தண்டனை ஏற்றதாக இல்லை நீதிபதி வழக்கு விசாரணையின் போது குறிப்பிட்டுள்ளார்.

வழக்கின் தீர்ப்பின் முடிவில், நீதிபதி அந்த வழக்கை சரியான முறையிலேயே நடத்தி சென்ற தலங்கம பொலிஸிற்கு நன்றி தெரிவித்தார்.

உயிரிழந்த பிச்சைக்கார பெண்ணின் உடல் முல்லேரியாப் பகுதிக்கு வந்தபோது கிராம மக்கள் பொலிஸாருக்கு அதுபற்றி தெரிவித்துள்ளனர். அதன்படி, தம்பதியர் உட்பட சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

தலாஹேன கமனல மாவத்தையில் வசிக்கும் மாலபே பொது சந்தை கோழி கடையில் நடத்திய மாத்தறை குலசூரியேஜ விஜித பிரேமலால், பிரியங்கா ஷியாமலி, சாமந்த பெரேரா லோகா மற்றும் மஞ்சுள வசந்த ஆகியோருக்க தண்னை வழங்கப்பட்டுள்ளது.

மகளே தாயின் உடலை அடையாளம் காட்டியுள்ளார்.

குறித்த தம்பதியினரின் மலசல கூட அறையில் குறித்த சிறுமி அடைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இறந்த பெண்ணின் மகளுக்கு 100,000 ரூபாய் இழப்பீடு வழங்கும்படி நீதிபதி உத்தரவிட்டார்.

Latest Offers