வவுனியாவில் இன்று முதல் குப்பை அகற்றும் நடவடிக்கை ஆரம்பம்

Report Print Theesan in சமூகம்

வவுனியா நகரசபையினால் ஞாயிற்றுக்கிழமைகளில் குப்பை அகற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக நகர உபபிதா சு.குமாரசுவாமி தெரிவித்துள்ளார்.

வவுனியா நகரசபை, சுகாதாரப்பகுதி ஊழியர்களின் மாதாந்தக்கூட்டம் நகர உபபிதா தலைமையில் இடம்பெற்றபோது அதில் வைத்து முடிவெடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கும்போது,

வவுனியா நகரசபையினால் பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் வீடுகள், தெருக்களிலுள்ள குப்பைகள் அகற்றும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளது.

ஏனைய கிழமை நாட்களில் வழமையான அன்றாட குப்பை அகற்றும் நடவடிக்கை நகரசபை ஊழியர்களினால் இடம்பெற்று வரும் நிலையில் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமைகளிலும் இவ்வாறு விஷேடமாக குறித்த பகுதிகளை தெரிவு செய்து அங்கிருக்கும் ஏனைய குப்பைகளை அகற்றுவதற்குரிய நடவடிக்கை இடம்பெறவுள்ளது.

இதற்கென நீளமான உழவு இயந்திர பெட்டிகள் வழங்கப்பட்டுள்ளன. இதனைப் பயன்படுத்தி இன்றைய தினம் வைரவப்புளியங்குளம் பகுதியில் விஷேட குப்பை அகற்றும் நடவடிக்கை மேற்கொள்ளபடவுள்ளது. இந்த நடவடிக்கை தொடர்ச்சியாக ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமைகளிலும் இடம்பெறவுள்ளது.

எனவே பொதுமக்கள் தமது அன்றாட குப்பைகளை விட்டு ஏனைய குப்பைகளை ஊழியர்களிடம் வழங்கி நகரசபை ஊழியர்களுக்கு ஒத்துழைப்புகளை வழங்குமாறு மேலும் தெரிவித்துள்ளார்.

Latest Offers