பொது தேர்தலை நடத்த கோரி ஹட்டனில் திரட்டப்பட்ட கையொப்பங்கள்

Report Print Thirumal Thirumal in சமூகம்

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு நிரந்தரமான தீர்வு ஒன்றை பெற பொது தேர்தலை நடத்துமாறு கோரி ஹட்டனில் கையொப்பம் திரட்டப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தை கலைத்து உடனடியாக பொது தேர்தலை நடத்தும் படியும், மக்களின் உரிமையை உறுதி செய்யுமாறு வலியுறுத்தியும் கையொப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த கையொப்பம் திரட்டும் நிகழ்வில் ஹட்டன் டிக்கோயா நகர சபை தலைவர், உறுப்பினர்கள், பிரதேச மக்கள் மற்றும் சமூக அமைப்புகள் என பலரும் கலந்து கொண்டனர்.

Latest Offers