நாட்டில் இன்றைய சூழ்நிலையில் அரசியல் குழப்ப நிலைமைக்கு காரணம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவர் நாட்டின் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷவை நியமித்தமையை ஐக்கிய தேசிய கட்சி வன்மையாக கண்டிக்கின்றது.
அரசியலமைப்பு சட்ட விதிகளை மீறி இவ்வாறாக நடந்து கொள்ளும் இவர்களுக்கு பாராளுமன்றத்தில் அதிக பெரும்பான்மை இல்லை.
ஐக்கிய தேசிய கட்சிக்கே அதிக பெரும்பான்மை இருக்கின்றது. இதனால் ஆட்சியை நடத்தக் கூடியவர்கள் ஐக்கிய தேசிய கட்சியவர்களே என்பதை மக்களுக்கு தெளிவூட்டும் வகையில் நுவரெலியா நகரில் ஆர்ப்பாட்ட பேரணியும், ஆர்ப்பாட்டமும் இன்று ஐக்கிய தேசிய கட்சியினரால் முன்னெடுக்கப்பட்டது.
பதாதைகளை ஏந்திய வண்ணம், கோஷங்களை எழுப்பியவாறு நுவரெலியா நகர சுற்றுவட்டத்திலிருந்து, தபால் நிலையம் வரை பேரணியாக சென்றதோடு, அங்கு எதிர்ப்பு ஆர்ப்பாட்டமும் இடம்பெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான நவீன் திஸாநாயக்க, கே.கே.பியதாஸ, நுவரெலியா மாநகர சபை தலைவர், ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் என பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.