சம்பூர் ஆலங்குளத்தில் மாவீரர் தினத்தை அனுஸ்டிக்க ஏற்பாடு

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

திருகோணமலை மாவட்டத்தில் மாவீரர் துயிலும் இல்லம் சம்பூர், ஆலங்குளம் பகுதியில் அமைந்துள்ளது.

ஆலங்குளம் துயிலும் இல்லம் தற்பொழுது மக்களால் புனரமைப்பு செய்யப்பட்டு வருகின்றது.

எதிர்வரும் 27 ஆம் திகதி மாவீரர் நாளை அனுஷ்டிக்கும் முகமாக இந்த துயிலுமில்லம் புனரமைப்பு செய்யப்பட்டு வருகின்றது.

சம்பூர் ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் 2500க்கும் மேற்பட்ட விடுதலைப்புலி போராளிகளின் வித்துடல்கள் இத்துயிலும் இல்லத்தில் விதைக்கப்பட்டிருப்பதாகவும் தெரியவருகின்றது.

மாவீரர்களை கௌரவிக்கும் தினமாக நவம்பர் 27ஆம் திகதி சர்வதேச மட்டத்தில் நினைவு கூரப்படுவதுடன் அன்றைய நாள் 6.05 மணியளவில் விடுதலைப்புலிகளின் போராளிகளுக்காக அஞ்சலி செலுத்தும் நிகழ்வும் இடம்பெறவுள்ளதாகவும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

Latest Offers