விடுதலைப் புலிகளின் தலைவர் வீட்டுக்குச் சென்ற சிவாஜிலிங்கம்!! பின்னர் நிகழ்ந்தவை..

Report Print Suthanthiran Suthanthiran in சமூகம்

விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் பிறந்தநாள் நிகழ்வினை கொண்டாட முயற்சித்தமைக்காக வடமாகாண சபை முன்னாள் உறுப்பினா் எம்.கே.சிவாஜிலிங்கம் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

வே.பிரபாகரனின் 64 ஆவது பிறந்த தினம் இன்றைய தினம் பல இடங்களில் கொண்டாடப்படுகின்றது.

இந்த நிலையில் எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில் இன்றைய தினம் காலை, வல்வெட்டித்துறையில் உள்ள வே.பிரபாகரனின் வீட்டிற்கு சென்ற போது, அங்குவந்த பொலிஸார் சிலருடைய அடையாள அட்டைகளை பறித்துக் கொண்டு விசாரணைக்கு வருமாறு அழைத்துள்ளனர்.இதன்போது, பிறந்தநாள் கொண்டாட்டங்களுக்காக எம்.கே.சிவாஜிலிங்கம் பிரபாகரனின் வீட்டுக்கு சென்றபோது சிவாஜிலிங்கமும் கைது செய்யப்பட்டுள்ளார்.

பின்னா் அவரிடம் கேக் உள்ளிட்ட பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக கொண்டுவரப்பட்ட பொருட்களை பறிமுதல் செய்த பொலிஸார் மேல் நடவடிக்கைகளைத் தொடர்ந்து அவரை விடுவித்துள்ளனர்.

Latest Offers