தமிழகம் முழுவதும் களைகட்டியது பிரபாகரனின் பிறந்தநாள் கொண்டாட்டம்

Report Print Shalini in சமூகம்

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் 64ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடியில் நாம் தமிழர் கட்சியினர் இனிப்புகள் வழங்கி கொண்டாடியுள்ளனர்.

மேலும், தூத்துக்குடியில் நாம் தமிழர் கட்சி சார்பில் 64 பேர் இரத்ததானம் செய்துள்ளனர்.

நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று தமிழகம் முழுவதும் பிரபாகரனின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

இதேவேளை, மன்னார்குடியில் தமிழர் தேசிய முன்னணி சார்பில் இரத்ததான முகாம் நடைபெற்றது.

மன்னார்குடி வடக்கு வீதியில் உள்ள திருமண மண்டபத்தில் இந்த இரத்த தான முகாம் நடைபெற்றது.

அத்துடன், பிரபாகரனின் 64ஆவது பிறந்தநாள் விழா திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது.

தமிழர் விடியல் கட்சியின் ஏற்பாட்டில் குறித்த பிறந்தநாள் கொண்டாட்டங்கள் நடைபெற்றுள்ளன.

Latest Offers