யானை தாக்குதலில் சிறுகாயங்களுடன் உயிர் பிழைத்த சிறுமி

Report Print Thileepan Thileepan in சமூகம்

வவுனியாவில் யானை தாக்கியதில் சிறுமி ஒருவர் சிறு காயங்களுடன் உயிர் பிழைத்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

ஓமந்தை - விளக்குவைத்த குளம் பகுதியில் குறித்த சம்பவம் நேற்று மாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

குறித்த சிறுமி சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது வீதியில் நின்று கொண்டிருந்த யானை தாக்கியதாகவும், இதனால் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து சிறுகாயங்களிற்கு உள்ளாகியுள்ளதாகவும் பின்னர் அயலவர்கள் வந்ததும் யானை அங்கிருந்து சென்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

விளக்குவைத்தகுளம் பகுதியை சேர்ந்த 11 வயதுடைய லக்சிகா என்ற சிறுமியே சம்பவத்தில் காயமடைந்துள்ளதுடன் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

Latest Offers