இன வன்முறைகள் தொடர்பில் உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவின் அறிக்கை சமர்ப்பிப்பு

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

எதிர்காலத்தில் வன்முறைகளை தடுக்கும் பொதுமக்களின் ஆலோசனைகள் தொடர்பான பிரஜைகள் ஆணைக்குழுவின் அறிக்கை அடங்கிய நூல்களை கண்டி மாவட்ட சர்வமத குழுவினர் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த சர்வமத அமைப்பின் இணைப்பாளர் எஸ்.மனோகரனிடம் கையளித்துள்ளனர்.

அறிக்கை கையளிக்கும் நிகழ்வு திருகோணமலையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த நூலில் இலங்கையில் அனைத்து சமயங்கள் மற்றும் அனைத்து இனங்களுக்கு இடையிலான கலந்துரையாடல் திட்டத்தின் போது 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் திகன, தெல்தெனிய பிரதேசங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற இன வன்முறைகள் தொடர்பில் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு மற்றும் 13 மே 2018 கண்டியில் இடம்பெற்ற, எதிர்காலத்தில் வன்முறைகள் இடம்பெற்றுள்ளன.

இந்த நிகழ்வின் போது ஆசிய அமைப்பின் மாவட்ட இணைப்பதிகாரி ஷெரின், தேசிய சமாதானப் பேரவையின் இணைப்பதிகாரி எம். நயாஜ், கந்தளாய் சக்தி மற்றும் அமைப்பின் பணிப்பாளர் சத்துராணி ஆகியோர் அருகில் நிற்பதையும் படத்தில் காணலாம்.

Latest Offers