விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனை வாழ்த்தி யாழ். பல்கலையில் சுவரொட்டி

Report Print Rakesh in சமூகம்

தமிழீழவிடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 64 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு யாழ். பல்கலைக்கழகச் சூழலில் வாழ்த்துச் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

பிரபாகரனின் 64-ஆவது பிறந்ததினத்தை இலங்கையில் உள்ளவர்கள் மட்டுமன்றி வெளிநாடுகளில் உள்ளவர்களும் கொண்டாடி வருகின்றனர்.

அந்த வகையில் இன்று இலங்கையில் வடக்கின் சில பகுதிகளிலும் பிரபாகரனின் பிறந்தநாளை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடப்பட்டு வருவதோடு, தாயகத்தின் பல பகுதிகளிலும் இரத்ததான முகாம்கள் நடைபெற்று வருகின்றது.

இந்நிலையிலே யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் குறித்த சூழலில் பிரபாகரனின் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers