சபாநாயகரின் உருவ பொம்மைக்கு தீ மூட்டி ஆர்ப்பாட்டம்

Report Print Thirumal Thirumal in சமூகம்

நாடாளுமன்ற தேர்தலை உடனடியாக நடத்த நடவடிக்கை எடுக்க வழியுறுத்தி ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியினரால் பத்து இலட்சம் கையொப்பங்களை பெற்றுக்கொளாளும் நடவடிக்கைகள் இராகலை நகரில் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் சீ.பீ.ரத்னாயக்காவின் தலைமையில் நேற்று இடம்பெற்ற இந்த நிகழ்வில், இராகலை நகர பௌத்த ஆலயத்துக்கு அருகில் ஒன்று கூடிய கட்சி ஆதரவாளர்கள் பேரணியாக வருகை தந்து இராகலை மேல் நகரதொகுதி சந்தியில் கூடியுள்ளனர்.

இன்றைய அரசியல் சூழ்நிலையில் சரியான தீர்வை பெற்றுக்கொள்ள உடனடியாக நடவடிக்கைகள் எடுத்து நாடாளுமன்ற தேர்தலை நடத்தும் படி வழியுறுத்தி கோஷங்களை எழுப்பியவாறு பேரணியில் கலந்து கொண்டவர்கள் ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிரான பதாதைகளையும் ஏந்தி வந்துள்ளனர்.

இதனையடுத்து, கூட்ட மேடை அமைக்கப்பட்ட இடத்திற்கு வருகை தந்தவர்கள் சீ.பீ.ரத்னாயக்கவின் உரையை தொடர்ந்து கையொப்பம் சேகரிக்கும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது பேரணியில் ஏந்தி வந்த சபாநாயகர் கரு ஜெயசூரியவின் உருவ பொம்மைக்கு தீ மூட்டி தாக்குதல் நடத்தியமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers