வழக்கு தவணைகளுக்கு சமூகமளிக்காத பெண்ணொருவர் உட்பட 4 பேர் கைது

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

வழக்கு தவணைகளுக்கு சமூகமளிக்காமல் தலைமறைவாகி இருந்த பெண்ணொருவர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்..

திருகோணமலை - தம்பலகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிராஜ் நகர் மற்றும் 98ஆம் கட்டை, கல்மெட்டியாவை பகுதிகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு இன்று கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இவர்கள் 30, 32 மற்றும் 36 வயதுடையவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சந்தேகநபர்களை இரண்டு, மூன்று வருடங்களுக்கு முன்னர் இருந்தே தேடிவருவதாகவும் இவர்கள் தொடர்பான முன்னைய குற்றச்சாட்டுகள் பற்றி பொலிஸ் நிலையங்களில் விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும் தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

அத்தோடு கைது செய்யப்பட்ட 4 பேரையும் கந்தளாய் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்திருந்தனர்.

Latest Offers