வவுனியாவில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிராக போராட்டம்

Report Print Theesan in சமூகம்

வவுனியாவில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிராக ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றுள்ளது.

வவுனியா, பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக பொதுஜன பெரமுனவின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றுள்ளது.

தேர்தலை நடத்துவதே சிறந்ததென்ற கருத்தை வலியுறுத்தும் வகையில் மூவின மக்களும் இணைந்து இவ்வார்ப்பாட்டத்தை மேற்கொண்டுள்ளோம் என ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர் தெரிவித்துள்ளனர்.

மேலும் தெரிவிக்கையில்,

“இலங்கையில் தற்போது பாரிய அரசியல் நகர்வொன்று இடம்பெற்றுக்கொண்டு இருக்கின்றது. இதன் காரணமாக நாடு தழுவிய ரீதியில் ஆர்ப்பாட்டங்கள் பல இடம்பெறுகின்றன.

அத்துடன் நாடு பொருளாதார ரீதியில் பாரிய வீழ்ச்சியை எதிர் நோக்கியுள்ள நிலையிலேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மகிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமித்தார். ஆனால் குறித்த நல்ல செயற்பாடு பாரதூரமாக தற்போது போய்க்கொண்டு இருக்கின்றது” என குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.ரஞ்சித், முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் தர்மபால செனவிரத்தின, வவுனியா தெற்கு சிங்கள பிரதேசசபை தலைவர், ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers