எனக்கு இழைக்கப்பட்ட பிழையை யார் திருத்துவார் – ஞானசார தேரர் கவலை

Report Print Kamel Kamel in சமூகம்

எனக்கு இழைக்கப்பட்டுள்ள பிழையை யார் திருத்துவார்கள் என பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

ஹோமாகம நீதிமன்ற வளாகத்தில் வைத்து இன்று ஊடகவியலாளர்களிடம் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், பிழையான குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில், நிரபராதியான என்னை சிறையில் அடைத்துள்ளனர்.

இந்த பிழையை யார் திருத்துவார்கள்? எங்கு இந்த பிழை திருத்தப்படும்? இதனைப் பற்றி நான் கடவுளிடம் மட்டும்தான் கூற முடியும்.

தயவு செய்து பிழையை திருத்துமாறு நான் வேண்டுகின்றேன் என ஞானசார தேரர் கூறியுள்ளார்.

கடந்த 2012ஆம் ஆண்டில் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கொட்டாவ நுழைவாயிலில் கடமையாற்றி வந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் அதிவேக நெடுஞ்சாலை பணியாளர்களை கடமையை செய்ய விடாது இடையூறு ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தி ஞானசார தேரருக்கு எதிராக தொடரப்பட்டிருந்த வழக்கு விசாரணைகளில் முன்னிலையாவதற்காக ஹோமாகம நீதிமன்றிற்கு சென்றிருந்த வேளை இதனைத் தெரிவித்துள்ளார்.

காணாமல் போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொடவை அச்சுறுத்திய குற்றச்சாட்டின் பேரில் ஞானசார தேரருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Latest Offers