நகையகத்தில் இடம்பெற்ற கொள்ளை! சந்தேகநபர்கள் மூவர் கைது

Report Print Manju in சமூகம்

ரம்புக்கனையில் அமைந்துள்ள தங்க நகை விற்பனை செய்யும் கடையில் இடம்பெற்ற கொள்ளை சம்பவம் தொடர்பாக மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 21ம் திகதி பிற்பகல் தங்க நகைகளை வாங்குவதற்காக ஒரு நபர் குறித்த கடைக்கு சென்றுள்ளார்.

இந்த நிலையில் குறித்த நபர் 9 லட்சத்திற்கும் அதிக பெறுமதியான தங்க நகையை திருடி தப்பிச்சென்றுள்ளார்.

குறித்த கடையில் இருந்த சிசிரிவி கமெராவில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளதை பொலிஸார் கண்டறிந்துள்ளனர்.

காணொளியை வைத்து விசாரணைகளை நடாத்திய பொலிஸார் சந்தேக நபர்களை இம்புல்கஸ்தெனிய பிரதேசத்தில் வைத்து காருடன் கைது செய்துள்ளனர்.

கொள்ளைக்கு பயன்படுத்திய காரை சந்தேக நபர்கள் வாடகைக்கு பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொள்ளையடிக்கப்பட்ட சில தங்க நகைகள் அடகு வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

Latest Offers