கொழும்பில் நபர் ஒருவருக்கு அதிர்ச்சி கொடுத்த வாகனம்! வெளியான CCTV காணொளி

Report Print Vethu Vethu in சமூகம்

கொழும்பை அண்மித்த பகுதியில் ஏற்பட்ட வீதி விபத்தில் இளைஞன் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 23ஆம் திகதி இடம்பெற்ற இந்த விபத்து தொடர்பான காணொளி ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

போக்குவரத்து சமிக்ஞைக்காக மோட்டார் சைக்கிளை நிறுத்தியிருந்த இளைஞனின் மீது மற்றுமொரு வாகனம் மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்தவர் கொழும்பு வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

நிக்கவரெட்டிய பிரதேசத்தை சேர்ந்த 26 வயதான இளைஞன் ஒருவரே படுகாயமடைந்துள்ளார்.

விபத்தை ஏற்படுத்தியவர் 23 வயதான மீரிகம பிரதேசத்தை சேர்ந்த இளைஞன் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தை ஏற்படுத்திய இளைஞனுக்கு பிணை வழங்க எண்ணிய நீதிபதி, குறித்த காணொளியை பார்த்த பின்னர் பிணை வழங்க மறுத்துள்ளார்.

விபத்தை ஏற்படுத்திய இளைஞனை எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Latest Offers