விடுதலைப் புலிகளின் சின்னங்களைப் பயன்படுத்த நீதிமன்றம் தடை

Report Print Nivetha in சமூகம்

யாழ்.வேலணை சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் சீருடைகள் அணிந்த உருவப்படங்கள் , கொடிகள் என்பவற்றை காட்சிப்படுத்த ஊர்காவற்துறை நீதிமன்ற நீதிவான் அ. ஜூட்சன் தடையுத்தரவு பிறப்பித்துள்ளார்.

யாழ். ஊர்காவற்துறை நீதிமன்ற நீதிவான் அ. ஜூட்சன் இன்று இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.

மேலும், இறந்தவர்களை நினைவு கூர்வதற்கு தடை இல்லை என்றும் புலிகள் அமைப்பின் சீருடைகள் , அவற்றை அணிந்த உருவப்படங்கள் , கொடிகள் என்பன காட்சிப்படுத்துவதற்கு தடை விதிக்கப்படுகின்றது என்றும் நீதிவான் கட்டளையில் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மட்டக்களப்பில் மாவீரர் தின நினைவேந்தலில் புலிகளின் சின்னங்கள், கொடிகள் மற்றும் பாடல்கள் என்பன பாவிப்பதற்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் இன்று மாலை தடை உத்தரவு பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers