இன்னுயிர் தியாகம் செய்த மாவீரர்கள்! பிரித்தானியாவில் உணர்வுபூர்வமான குருதி கொடை

Report Print Theenan Theenan in சமூகம்

மாவீரர் தினத்தை முன்னிட்டு பிரித்தானியாவில் மாபெரும் குருதிக்கொடை நிகழ்வு என்றும் இல்லாதவாறு மிகவும் உணர்வெழுச்சியுடன் நடத்தப்பட்டுள்ளது.

கடந்தவாரத்தின், புதன், சனி மற்றும் ஞாயிறு ஆகிய தினங்களிலும் அத்துடன் இன்றைய தினம் பிரித்தானியாவின் பல்வேறு பகுதிகளில் குறித்த குருதி கொடை நிகழ்வு நடத்தப்பட்டுள்ளது.

நாடு கடந்த அரசாங்கத்தின் விளையாட்டு துறை சமூகநல பிரதி அமைச்சின் ஏற்பாட்டினால் நடாத்தப்பட்ட இந்த நிகழ்வில் பெருமளவிலானோர் கலந்து கொண்டு குருதி தானம் செய்திருந்தனர்.

இதன்படி, கடந்த புதன்கிழமை Bermuda Phoenix Centre, Bermuda Road, Nuneaton. CV10 7HU பகுதியிலும், சனிக்கிழமை luton St.geroges square, Bridge street, Luton, LU1 2NF பகுதியிலும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஞயிற்றுக்கிழமை லண்டன் Tooting Blood Donor Centre, 75 Cranmer Terrace, London, SW17 0RB மற்றும் Edgware Blood Donor Centre, Edgware Community Hospital, Burnt Oak Broadway, Edgware, HA8 0AD மற்றும் Norfolk House Donor Centre Manchester ,M21DA பகுதியிலும் இந்த குருதி கொடை நிகழ்வு நடத்தப்பட்டுள்ளது.

மேலும், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரின் பிறந்ததினத்தை முன்னிட்டு இன்றைய தினம் west end, Royal college of nursing 20 cavendish square,London, W1G 0RN மற்றும் Edgware Donor Centre, Edgware Community Hospital, Burnt Oak Broadway, Edgware, HA8 0AD பகுதியிலும் இந்த குருதி கொடை நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தாயக விடுதலைக்காக தம் இன்னுயிர்களை தியாகம் செய்த மாவீரர்களை நினைவு கூர்ந்து நடாத்தப்பட்ட இந்த குருதி கொடை நிகழ்வில் சுமார் 150 இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாட்டாளர்களும் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Offers