இலங்கை வாழ் மக்களுக்கு இன்றைய தினம் குறித்த முக்கிய அறிவித்தல்!

Report Print Jeslin Jeslin in சமூகம்

நாட்டின் சில பகுதிகளில் நாளைய தினம் 15 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இலங்கை மின்சார சபையினால் முன்னெடுக்கப்படவுள்ள அத்தியாவசிய திருத்தப் பணிகள் காரணமாக இவ்வாறு நீர் வெட்டு அமுல்படுத்தப்படுகின்றது.

இதன்படி, வாத்துவ, வஸ்கடுவ, பொத்துபிட்டிய, களுத்துறை (வடக்கு மற்றும் தெற்கு), கட்டுகுருந்த, நாகொட, பயாகல, பிலம்வாவத்த, பொம்புவல, மக்கொன, பேருவளை, களுவாமோதர, மொரகல்ல. அளுத்கம, தர்கா நகர் மற்றும் பெந்தோட்டை ஆகிய பகுதிகளில் இவ்வாறு நீர் விநியோகம் தடைப்படும் எனவும் சபை மேலும் அறிவித்துள்ளது.