நிர்மாண பணிகளுக்காக அழைத்து வரப்பட்ட இந்தியர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை

Report Print Ajith Ajith in சமூகம்

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு, நிர்மாண பணிகளுக்காக அழைத்து வரப்பட்ட 30 பேர் நிர்க்கதியான நிலைக்கு ஆளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அநுராதபுரம் - கலேவெலயில் மேற்கொள்ளப்படும் நிர்மாண பணிகளுக்காக இந்தியாவின் ஜக்லேன்ட் மாநிலத்தில் இருந்து இவர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர்.

எனினும் கடந்த 3 மாதங்களாக தங்களுக்கு சம்பளம் எதுவும் வழங்கவில்லை என அவர்கள் பொலிஸில் முறையிட்டுள்ளனர்.

இதேவேளை, தம்மை இலங்கைக்கு அழைத்து வந்த முகவர் தமது கடவுச்சீட்டுக்களை அவர்கள் வசம் வைத்திருப்பதாகவும் நிர்க்கதியான இந்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

Latest Offers