வழிமறிக்கப்பட்ட பேருந்தில் வைத்து வசமாக சிக்கிய இரு இளைஞர்கள்

Report Print Theesan in சமூகம்

யாழ்ப்பாணத்திலிருந்து திருகோணமலை நோக்கி கேரள கஞ்சாவினை கடத்தி சென்ற இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் இன்று காலை 6 மணியளவில் வவுனியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் யாழ். - கதிர்காமம் பேருந்து, தாண்டிக்குளம் பகுதியில் வழிமறித்து சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

இதன்போது அதில் பயணித்த அநுராதபுரத்தை சேர்ந்த 21 மற்றும் 28 வயதுகளுடைய இரு இளைஞர்கள் 2 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் மேலதிக விசாரணைகளின் பின் இன்று வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers