வவுனியா மனித உரிமை வலய செயலணியின் அங்குரார்ப்பண நிகழ்வு

Report Print Theesan in சமூகம்

வவுனியா பிரதேச மட்ட மனித உரிமை வலய செயலணியின் அங்குரார்ப்பண நிகழ்வும், கருத்தமர்வும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் எம்.ஆர்.பிரியதர்சன மற்றும் சட்டத்தரணி ஆர். எல்.வசந்தராஜ் தலைமையில் இடம்பெற்றது.

குறித்த கருத்தமர்வு வன்னி விருந்தினர் விடுதியில் இன்று காலை 10 மணியளவில் இடம்பெற்றிருந்தது.

மனித உரிமை மீறல்களை வெளிக்கொண்டு வருதல் மற்றும் சட்டரீதியிலான தெளிவூட்டல்களை வழங்குதல் என்பன தொடர்பாக இந்த கருத்தமர்வில் தெளிவுபடுத்தப்பட்டிருந்தது.

காலை முதல் மாலை வரை இடம்பெற்ற கருத்தமர்வில் வவுனியா மாவட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், ஆண்கள், பெண்கள் எனப்பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.