கிழக்கு மாகாணத்தில் 2018ஆம் ஆண்டுக்கான கலாசார விழா

Report Print Kumar in சமூகம்

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம், மண்முனைப்பற்று பிரதேச செயலகம், பிரதேச கலாசார பேரவை இணைந்து நடாத்திய 2018ஆம் ஆண்டுக்கான கலாச்சார விழா சிறப்பாக நடைபெற்றுள்ளது.

மட்டக்களப்பு - ஆரையம்பதி, நந்தகோபன் கலாசார மண்டபத்தில் இன்று மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் சத்தியானந்தி நமசிவாயம் தலைமையில் இவ்விழா நடைபெற்றுள்ளது.

தமிழ் - முஸ்லிம் மக்களின் கலை கலாசாரங்களை வெளிப்படுத்தும் வகையிலும் இன ஐக்கியத்தினை பேணும் வகையிலும் இக்கலாசார விழா நடைபெற்றுள்ளது.

நிகழ்வின் ஆரம்பத்தில் வரவேற்பு நடனமாக நாட்டுக்கூத்து ஆடப்பட்டுள்ளதுடன் மண்முனைப்பற்றின் சிறப்பினை வெளிப்படுத்தும் வகையில் சிகரம் என்னும் நூலும் வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் மண்முனைப்பற்று பிரதேசத்தைச் சேர்ந்த கலைத்துறை மற்றும் வைத்தியதுறைக்கு பங்களிப்பு செய்தோர் கௌரவிக்கப்பட்டுள்ளனர்.

இதன்போது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார் மண்முனைப்பற்று வயோதிபர் சங்கத்தினால் கௌரவிக்கப்பட்டார்.

அத்துடன் கலாச்சார விழாவினையொட்டி கலைக்கழகங்கள், மாணவர்கள் மத்தியில் நடாத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்றவர்களும் இதன்போது பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வின் போது இரு இன கலைஞர்களின் பல்வேறு கலை நிகழ்வுகள் நடைபெற்றமை சிறப்பம்சமாகும்.

இந்த கலாசார விழாவிற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார் கலந்துகொண்டதுடன் சிறப்பு அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட செயலக மேலதிக அரசாங்க அதிபர் நவரூபரஞ்சனி முகுந்தன், ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் டாக்டர் அல்மேடா, மண்முனைப்பற்று கோட்டக்கல்வி பணிப்பாளர் கே.நல்லதம்பி, மூத்த கலைஞர் மு.கணபதிப்பிள்ளை உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Latest Offers