மாவீரர் அஞ்சலியோடு ஆரம்பமாகிய வவுனியா வாசிப்பு மாத பரிசளிப்பு நிகழ்வு

Report Print Theesan in சமூகம்

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் வாசிப்பு மாத பரிசளிப்பு நிகழ்வு, போரில் உயிரிழந்த மாவீரர்களை நினைவு கூறும் முகமாக அஞ்சலி செலுத்தலோடு ஆரம்பமாகியுள்ளது.

வவுனியா பிரதேச சபையில் இன்று காலை 9.30 மணியளவில் சபையின் தலைவர் து.நடராயசிங்கம் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றுள்ளது.

மேலைத்தேய வாத்திய அணிவகுப்புடன் விருந்தினர்கள் அழைத்து வரப்பட்டதுடன் மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகியுள்ளன.

தொடர்ந்து போரில் உயிரிழந்த மாவீரர்களிற்கு இரு நிமிட அகவணக்கம் செலுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து, பிரதேசசபையால் நடாத்தபட்ட வாசிப்புமாத போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு, ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் பாடசாலை மட்டத்தில் அதிகூடிய புள்ளிகளை பெற்ற மாணவர்களுக்கும் மற்றும் முன்பள்ளி மாணவர்களுக்கும் பரிசில்களும், சான்றிதழ்களும் வழங்கி வைக்கபட்டுள்ளன.

அத்துடன் இலக்கிய பணியை பாராட்டி வவுனியாவின் மூத்த கலைஞரான தமிழ்மணி அகளங்கன் கௌரவிக்கபட்டதோடு தொடர்ந்து கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.

முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களான ப.சத்தியலிங்கம், ரி.லிங்கநாதன், சிறிரெலோ கட்சியின் செயலாளர் கா. உதயராசா, மாவட்ட மேலதிக அரச அதிபர் தி.திரேஸ்குமார், பிரதேச செயலாளர் கா.உதயராசா ஏனைய பிரதேச சபைகளின் தலைவர்களான ச. தணிகாசலம், ஆ.அந்தோணி, பிரதேசசபையின் ஊழியர்கள், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

Latest Offers