வவுனியாவில் பிரபாகரனின் புகைப்படத்துடன் வியாபாரி

Report Print Theesan in சமூகம்

வவுனியா பழைய பேருந்து நிலையத்தில் வெற்றிலை வியாபாரம் மேற்கொண்டு வரும் வியாபாரி ஒருவர் தனது வியாபாரத்தில் தேசியத்தலைவரின் புகைப்படம் ஒன்றினை காட்சிப்படுத்தியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

தங்கத்தலைவர் எங்களின் பிரபாகரன் என்று தலைவரை போற்றி புகழ்ந்து வருவதுடன் தன்னிடம் வெற்றிலை வாங்க வரும் சிங்கள, தமிழ் மக்கள் அனைவரிடமும் புகைப்படத்தை காண்பித்து தலைவரின் வரலாற்றுப்பதிவை தெரிவித்தும் வருகின்றார்.

இவ்வாறு வவுனியாவில் மூவின மக்களும் சங்கமிக்கும் மத்திய நகரில் இவரின் இந்நடவடிக்கை பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

Latest Offers