இலங்கை கடற்படை கப்பல் ஒன்றுடன் மோதி கடலில் மூழ்கிய இந்திய மீன்பிடி வள்ளம்

Report Print Ajith Ajith in சமூகம்

இந்தியாவுக்கு சொந்தமான மீன்பிடி வள்ளம் ஒன்று நேற்று இலங்கையின் கடற்படை கப்பல் ஒன்றுடன் மோதிய நிலையில் கடலில் மூழ்கியுள்ளது.

வெளியுறவு அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.

இலங்கை கடற்பரப்பில் மீன்பிடித்துக்கொண்டிருந்த இந்தியாவின் 30 படகுகளை அண்மித்தபோதே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இலங்கையின் கடற்படைக்கு சொந்தமான எடிட்ஹரா என்ற கப்பலுடனேயே இந்திய படகு மோதியுள்ளது.

இதன்போது படகில் இருந்த 4 இந்திய மீனவர்களை இலங்கையின் கடற்படையினர் காப்பாற்றினர்.

காப்பாற்றப்பட்ட நான்கு மீனவர்களும் காங்கேசன்துறை காவல்துறை நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்

Latest Offers