தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு பரிசளிப்பு மற்றும் கௌரவிப்பு விழா

Report Print Mohan Mohan in சமூகம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச சபையினால் தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களையும் கரைதுறைப்பற்று பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் வெற்றியீட்டிய மாணவர்களையும் கௌரவித்து பரிசில்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வு இன்று காலை 9 மணிக்கு கரைதுறைப்பற்று பிரதேச சபையின் கலாசார மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.

கரைதுறைப்பற்று பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் கரைதுறைப்பற்று பிரதேச சபையினால் தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு பல்வேறு போட்டி நிகழ்வுகள் நடாத்தப்பட்டன.

இந்த போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களையும் கரைதுறைப்பற்று பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் வெற்றியீட்டிய மாணவர்களையுமே இவ்வாறு கௌரவித்துள்ளனர்.

நிகழ்வில் கரைதுறைப்பற்று தோட்டக் கல்வி அதிகாரி சிறிபுஸ்பநாதன், கரைதுறைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் க தவராசா, கரைதுறைப்பற்று பிரதேச சபையின் செயலாளர் சபேசன், கரைதுறைப்பற்று பிரதேச சனசமூக நிலையங்களின் சமாச தலைவர் மற்றும் பிரதேச சபையின் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மாணவர்களுக்கான நினைவு பரிசில்களை வழங்கி வைத்துள்ளனர்.

Latest Offers